தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு பாக். வலியுறுத்தல்

ஞாயிறு, 25 ஜனவரி 2009 (15:40 IST)
பாகிஸ்தான் - ·ப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

மேலும், புதிதாக அமெரிக்க அதிபர் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா, பயங்கரவாத ஒடுக்கல் நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் எல்லை மாவட்டமான வஸிரிஸ்தானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 8 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஒபாமா அதிபர் பதவியேற்றப் பின்னர் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்று செய்திகள் கூறுகின்றன.

இது தாக்குதல்களில் கொல்லப்படும் அப்பாவிகளின் உயிர்களை கருத்தில் கொண்டு, பயங்கரவாதத்தை ஒடுக்க சரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்