இதுகுறித்து, சிறிலங்க அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் சிறிலங்கா மீதான நிலைப்பாட்டில் இந்திய அரசின் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசு சிறிலங்காவிற்கு சாதகமாகவே உள்ளது.
வடக்கில் போர் நடக்கும் பகுதிகளுக்கான அரசின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது
வடக்கில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக இராமநாதன் சுதந்திரபுரம், அருணாசலம் வெற்றிபுரம், கதிர்காமர் எழுச்சிநகர் ஆகிய பெயர்களில் மூன்று விடுதலைக் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன என்றார்.