இடம்பெயர்ந்த மக்களிற்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வினியோகம் படையினரின் தாக்குதலால் அடிக்கடி தடைபடுகிறது. இதனால் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 15.01.2009 அன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கடந்த ஒரு வாரமாக உணவு வினியோகம் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது 4 லட்சம் மக்கள் சிறிலங்கப் படையினரின் தாக்குதல் வளையத்தில் முடக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு இருப்பு முழுதும் தீர்ந்துவிட்டது. உணவு கொண்டு செல்லும் பாதையினை அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.
வேண்டுகோள்கள்:
பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மீதான வான்வழி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஐ.நா, சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களை இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.
சோதனைச் சாவடிகளைத் திறப்பதன் மூலம் காயப்பட்ட பொதுமக்களை வெளி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்.
சிறிலங்க படைகளின் தமிழர் மீதான இனப்படுகொலைகளுக்கு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில் உலக நாடுகள் செய்யும் உதவியினை நிறுத்த வற்புறுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் செய்து விடுதலைப் புலிகளுடன் பேச சிறிலங்க அரசை வற்புறுத்த வேண்டும்.