பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சேரிப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவுக்கு பின்னர் ஏற்பட்ட இந்தத் தீ விபத்திற்கு காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அப்பகுதியில் விதிமுறைகளுக்குப் புறம்பாக மின்சாரம் எடுக்கப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் சுமார் 12க்கும் அதிகமான குடிசைகள் சாம்பலாயின. விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அபாஷி ஷஹீத் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் குடிசை வாழ் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், ஏராளமானோர் தீயில் சிக்கிக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.