இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் வீசி பாலஸ்தீனம் தாக்குதல்?

வியாழன், 8 ஜனவரி 2009 (18:07 IST)
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இன்று ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தை சேர்ந்த குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

லெபனான் நகர்ப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் குண்டுகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் குண்டுகள் வந்த பகுதியை நோக்கி இஸ்ரேல் படைகள் 5 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்