கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: பாக். ஊடகங்கள்

மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என அந்நாட்டின் டான் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இத்தகவலை எந்த அரசு அதிகாரி தெரிவித்தார் என்ற தகவலை அத்தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பிலும் இதுவரை விளக்கம் கேட்கப்படவில்லை.

மும்பை தாக்குதலில் உயிருடன் கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கஸாப், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என இந்தியா பலமுறை கூறியும் அதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

அஜ்மல் கஸாப் குறித்து பாகிஸ்தான் தேசிய தகவல் தொகுப்பில் எந்தத் தகவலும் இல்லை என்று மட்டும் பாகிஸ்தான் விளக்கம் தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கஸாப் பாகிஸ்தானியர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்