காஸாவில் ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி
புதன், 7 ஜனவரி 2009 (13:44 IST)
காஸா பகுதியில் ஐ.நா நடத்தி வந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி நேற்று நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் ஜபால்யா அகதிகள் முகாமில் உள்ள அல்-ஃபகோரா பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அங்கே தங்கியிருந்த நிலையில் பள்ளிக்கு அருகே வீசப்பட்ட 2 குண்டுகள் வெடித்ததில் பள்ளியின் உள்ளே, வெளியே இருந்த ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஐ.நா.வின் நிவாரணப் பணி மையம் சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு பள்ளியின் மீது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 75 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம், காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 620 பேர் உயிரிழந்துள்ளனர்.