பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் முக்கியப் பாதை திறப்பு

சனி, 3 ஜனவரி 2009 (12:27 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ, அமெரிக்கப் படைகளுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லப் பயன்படும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள முக்கியப் பாதையை பாகிஸ்தான் இன்று மீண்டும் திறந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கைபர் கணவாய் பகுதியில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்தைத் தொடர்ந்து நேட்டோ, அமெரிக்கப் படைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் பாதை கடந்த 3 தினங்களுக்கு முன் மூடப்பட்டது.

தற்போது அப்பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டு விட்டதால் அப்பாதையை இன்று மீண்டும் திறந்துள்ளதாக கூறினர்.

பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் முக்கியத் தடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் கருதி அடுத்தாண்டில் மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தான் எல்லையில் குவிக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இப்பாதை வழியாகவே நேட்டோ, அமெரிக்கப் படைகளுக்கு தேவையான 75% எரிபொருள், உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்