விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் பிடித்து விடுவோம் என்று கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதேபோல் மகிந்த அரசு, கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்று கூறியது. தற்போது வடமத்திய மாகாண சபை நடைபெறும் தேர்தல் நாளான பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் பிரபாகரனையும் பிடிப்போம் என்று கூறுகிறது.
போர் இழப்புக்கள் பற்றி சிங்கள கிராம மக்கள் நன்கு அறிவர். ஏனெனில் அவர்கள்தான் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களைப் பெற்று வருகின்றனர்.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.