இந்தியா-பாகிஸ்தான் உறவு: ரஷ்யா, சீனா கவலை

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (13:03 IST)
மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யா, சீனா அரசுகள், இப்பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் தீர்த்துக் கொள்ளவதற்கு தேவையான நடவடிக்கைகளில் கூட்டாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ரஷ்ய அயலுறவு அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அயலுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ, சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர்ப் பதற்ற‌த்தால் தெற்காசிய பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளும் பதற்றத்தை தணித்து கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக ஈடுபட ஒப்புக் கொண்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்