இந்துகுஷ், ஆஃப்கானில் மித நிலநடுக்கம்

திங்கள், 29 டிசம்பர் 2008 (13:16 IST)
ஆஃப்கானிஸ்தானிலும், அதன் வட பகுதியில் உள்ள இந்துகுஷ் மலைத் தொடரிலும் இன்று காலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 09.08 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையிலிருந்து 35.4 வடக்கும், தீர்க்கரேகை 71.2 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் கராச்சி அருகே இதேபோன்றதொரு மித நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்