பெனாசிர் நினைவு தினம்: ஏராளமானோர் அஞ்சலி

சனி, 27 டிசம்பர் 2008 (12:20 IST)
மறைந்த பெனாசிர் பூட்டோ முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உடல் புதைக்கப்பட்ட இடமான கர்ஹி குதா பாக்‍ஷில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பெனாசிரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது கணவரும், தற்போதைய அதிபருமான ஆசிப் அலி சர்தாரி கர்ஹி குதா பாக்‍ஷியில் இன்று உரையாற்ற உள்ளார்.

அதிபர் முஷாரஃப்பால் நாடு கடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பங்கேற்பதற்காக கடந்தாண்டு மீண்டும் பாகிஸ்தான் வந்தடைந்தார் பெனா‌‌சி‌ர். ராவல்பிண்டியில் கடந்தாண்டு இதே தினத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் அங்கு தற்கொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பெனாசிர் உயிரிழந்தார்.

இதையடுத்து பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பெனாசிரின் சொந்த கிராமமான கர்ஹி குதா பாக்‍ஷியில் அவரது உடல் புதைக்கப்பட்டது.

பெனாசிர் மறைந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல நூறு கி.மீ கடந்து கர்ஹி குதா பாக்‍ஷியில் இன்று குவிந்தனர்.