பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கவலைக்கிடம்?

திங்கள், 22 டிசம்பர் 2008 (17:49 IST)
நுரையீரலில் ஏற்பட்ட நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் (50) உடல்நிலை மிகவும் தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதால் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

லண்டனில் வெளியாகும் டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதுகுறித்து கூறப்பட்டுள்ள செய்தியில், அவருக்கு உடனடியாக நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஆனால் அவரது உடல்நிலை அறுவைச் சிகிச்சைக்கு தயாராக இல்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் ரோலிங் ஸ்டோன் இதழில் புலனாய்வுப் பத்திரிகையாளராக பணியாற்றிய இயான் ஹல்பெரின் என்பவர் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதையை எழுதி வருகிறார்.

அதில் ‘ஆல்பா 1-ஆன்ட்டிரிப்சின’ என்னும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜாக்சன் பேச இயலாத நிலையில் உள்ளதாகவும், அவரது இடது கண் பார்வை 95 சதவீதத் திறனை இழந்து விட்டதாகவும் எழுதப்பட்டுள்ளதாக அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்நோய் தாக்கியவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்பதாலும், ஜாக்சனுக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாத காரணத்தாலும் அவர் உயிர் பிழைக்க போராடி வருகிறார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜாக்சனின் வயிற்றின் உட்பகுதியில் பலத்த ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதை நிறுத்த அவரது மருத்துவர்கள் போராடி வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்