பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் இந்தியாவின் விருப்பமே: யு.எஸ்.
சனி, 20 டிசம்பர் 2008 (16:19 IST)
வாஷிங்டன்: மும்பை தாக்குதலுக்கு பின்னர் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை உருவாக்க உள்ளது குறித்த விவகாரம் இந்திய அரசு, அந்நாட்டு மக்களுடன் தொடர்புடையது என அமெரிக்க செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மாக் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவையில் கடந்த 17ஆம் தேதி தேசப் புலனாய்வு முகமை சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க அயலுறவுத் துறை வட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என மெக்கார்மாக்கிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், அதுதொடர்பான விதிகள் இந்திய அரசு, அந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்று பதிலளித்தார்.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்துள்ளது குறித்த கேள்விக்கு, இதுதொடர்பாக ஏற்கனவே பல கருத்துக்களைத் தெரிவித்தாகிவிட்டது. இதுபற்றி மேலும் விவாதிப்பதிற்கு இல்லை என்றார்.