சிலியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:08 IST)
சான்டியாகோ: சிலி நாட்டின் மத்திய பகுதியில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.3, 5.8 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.50 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தைத் (6.3 ரிக்டர்) தொடர்ந்து 3.20 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர்) ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடுமையான அதிர்வுகள் காரணமாக வல்பரெய்ஸோ, விநாடெல்மர் ஆகிய பகுதியில் உள்ளவர்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.

முதல் நிலநடுக்கம் பூமிக்கடியில் 19 கி.மீ ஆழத்திலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் 10.6 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்