புஷ் மீது ஷூ வீசிய விவகாரம்: அல்-சைதி மன்னிப்புக் கடிதம்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (16:14 IST)
ஈராக்கிற்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது காலணி (ஷூ) வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் அல்-சைதி தனது செயலுக்கு மன்னிப்புத் தெரிவிப்பதாக ஈராக் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனை ஈராக் பிரதமர் நௌரி அல்-மாலிகியின் செய்தித் தொடர்பாளர் யாஸின் மஜித் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

அந்த மன்னிப்புக் கடிதத்தில் தனது செயல் மிகவும் அசிங்கமானது. எனினும் தன்னை மன்னிக்க வேண்டும் என அல்-சைதி கூறியுள்ளதாக யாஸின் தெரிவித்தார்.

ஈராக்கிற்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளரான அல்-சைதியின் மீதான குற்றம் மன்னிக்கப்படவில்லை என்றால் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் கொடுக்கத் தயார்: இதற்கிடையில், அல்-சைதியின் தைரியத்தைப் பாராட்டி தனது 20 வயது மகளை அவருக்கு திருமணம் செய்தி கொடுக்கத் தயார் என எகிப்தைச் சேர்ந்த அமால் சாத் குமா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சாத் குமாவின் மகள் கூறுகையில், ஈராக்கில் வாழவே விரும்புகிறேன். அல்-சைதியைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் எனது ஆசையும் நிறைவேறும், எனது வாழ்க்கைக்கும் ஒரு கௌரவம் கிடைக்கும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்