அமெரிக்க அதிபர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக ஒபாமா தேர்வு

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:03 IST)
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

திங்களன்று நடந்த சம்பிரதாய வாக்கெடுப்பில் கொலம்பியா மாவட்டம் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 538 தேர்தல் தொகுதிகளின் (Electoral College) உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு ஆதரவாக 365 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 173 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அந்நாட்டின் புதிய அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இன்று நடந்த சம்பிரதாய வாக்கெடுப்புக்கு பின்னரே அவர் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.