காங்கோ டவுனில் 150 பேர் படுகொலை: உரிமைக்குழு அறிக்கை

வியாழன், 11 டிசம்பர் 2008 (18:04 IST)
குடியரசு நாடான காங்கோ டவுனில் ஜெனரல் லாரன்ட் குன்டாவுக்கு ஆதரவானவர்கள் கடந்த மாதம் நடத்திய படுகொலை சம்பவத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை கண்காணிப்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் கிவான்ஜா நகரில் ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நோர்ட்-கிவு மாகாணத்தில் இந்தப் படுகொலை சம்பவம் நடந்த போது அதற்கு 0.8 கி.மீ தொலைவில் ஐ.நா அமைதிப் படைகள் இருந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

நாட்டை விட்டு ஓடிய ஜெனரல் லாரன்ட் குன்டா, தற்போது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்