மும்பை நகரில் ஊடுறுவி லஸ்கர் ஈ தயீபா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முழு அளவிற்கு உதவியுள்ளது என்று அமெரிக்க உளவு கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மும்பையை தாக்குவதற்குத் தேவையான விவரங்களை அளித்தது மட்டுமின்றி, அதில் ஈடுபட்ட லஸ்கர் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, தேவையான நிதி, பாதுகாப்பு ஆகியவற்றையும் ஐ.எஸ.ஐ. அளித்தது என்று அமெரிக்க உளவு அமைப்பின் செயல்பாட்டை கண்காணிக்கும் (Counter Intelligence unit) தனிப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்ததாக நியூ யார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ.ஐ. அமைப்பின் உதவியினாலேயே லஸ்கர் அமைப்பு பலம் பெற்ற பயங்கரவாத அமைப்பாக வளர்ந்துள்ளது என்றும், ஐ.எஸ்.ஐ.க்கும் லஸ்கருக்கும் இடையே ஜரார் ஷா என்ற பயங்கரவாதி செயல்பட்டதாகவும், மும்பைத் தாக்குதலின் மையமாக இந்த பயங்கரவாதி செயல்பட்டுள்ளார் என்றும் அந்த அதிகாரி கூறியதாக அந்த நாளேடு கூறியுள்ளது.
ஆயினும் மும்பைத் தாக்குதலிற்கும், பாகிஸ்தான் அரசிற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ள அந்த அதிகாரி, லஸ்கர் ஈ தயீபா அமைப்பின் பலத்தை அமெரிக்க உளவுப் பிரிவு மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.