கலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம்!

சனி, 6 டிசம்பர் 2008 (11:22 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவையில் இது 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

என்றாலும் சேதம் பற்றி விவரம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியாகத் தகவல் ஏதும் இல்லை.

இந்த நிலநடுக்கத்தின் ஈர்ப்பு மையம் மொஜாவா பாலைவனத்திற்கும், பார்ஸ்டோவிற்கும் இடையே இருந்ததாகவும் பூகோளவியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்