ரஷ்ய அதிபர் மெட்விடேவ் இந்தியா வருகை

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (12:30 IST)
ரஷ்ய அதிபர் ிமிட்ரி மெட்விடேவ் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். புதுடெல்லி விமானநிலையத்திற்கு வந்த அவரை அயலுறவு இணையமைச்சர் அனந்த சர்மா வரவேற்றார்.

பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை சந்தித்து பேச உள்ள அதிபர் மெட்விடேவ், கூடங்குளத்தில் ரஷ்யா உத‌வியுடன் அமைக்கப்பட உள்ள புதிய அணு உலைகள் உட்பட இரு நாடுகளுக்கு இடையிலான அணு சக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என அயலுறவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்