ஈராக்கிற்கு சுற்றுப்பயணம்: ஒபாமா திட்டம்

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (11:34 IST)
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா மேற்கொள்ளும் முதல் அய‌ல்நாட்டுப் பயணம் ஈராக்கிற்கு செல்வதாக இருக்கும் எனத் தெரிகிறது.

ஈராக் பிரதமர் நுரி அல்-மலிகியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பராக் ஒபாமா, அந்நாட்டில் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டியதாக ஈராக் தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் வேட்பாளராக போட்டியிடும்போது கடந்த ஜூலை 22-ம் தேதி ஈராக்கில் பயணம் மேற்கொண்டிருந்தார் ஒபாமா. அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்க படைகளை படிப்படியாக ‌திரு‌ம்ப பெறுவதாக தேர்தல் பிரசாரத்தின் போது அவர் உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையில் மலிகியுடனான உரையாடலின் போது வரும் 2011ஆம் ஆண்டிற்குள் அமெரிக்க படைகளை ‌திரு‌ம்ப பெறுவது தொடர்பாக வாஷிங்டனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஈராக்கின் முடிவை பெரிதும் வரவேற்றதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்