ஒபாமாவுக்கு என்னால்தான் வாக்குகள் கிடைத்தது: புஷ்

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (18:33 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னையும், குடியரசுக் கட்சியையும் ஒதுக்கவே மக்கள் பராக் ஒபாமாவிற்கு வாக்களித்தனர் என அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அந்நாட்டின் ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு புஷ் அளித்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதில் தங்களது ஆட்சியை ஒதுக்க வேண்டும் என மக்கள் நினைத்ததே ஒபாமாவின் வெற்றிக்கு காரணம் எனக் கருதுகிறீர்களா என புஷ்ஷிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, குடியரசுக் கட்சியினர் மீண்டும் ஆட்சிக்கு வராமல் ஒதுக்க வேண்டும் என்று ரீதியில் மக்கள் வாக்களித்துள்ளதாக புஷ் பதிலளித்தார்.

அதில் தொடர்ந்து பேசிய புஷ், என்னால்தான் பலர் ஒபாமாவுக்கு வாக்களித்தனர் என்பதை என்னால் உறுதியாக கூறுவேன். ஏனென்றால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒபாமா தங்களுக்கு தேவை என மக்கள் கருதியதே இதற்கு காரணம்.

குடியரசுக் கட்சியின் பின்னடைவு, பொருளாதாரச் சூழல் ஆகியவற்றால் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் கடும் சவாலைச் பிரசாரத்தின் போது சந்திக்க நேர்ந்ததாகவும் புஷ் கூறியுள்ளார்.

புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமாவுடன் உங்களுடைய நட்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, அதிபர் பதவியில் இருந்து விலகும் முன் ஒபாமாவுடன் தாம் பேசும் கடைசி வாசகம், “என்னால் ஏதாவது உதவி ஆக வேண்டுமென்றால் உடனடியாக அழைப்பு விடுங்கள” என்பதே என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்