பாகிஸ்தான் ஒரு சர்வதேசத் தலைவலி: மடேலின் சாடல்

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:26 IST)
பயங்கரவாதம், அணு ஆயுதம், சர்வதேச பிரச்சனைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள பாகிஸ்தான் ஒரு சர்வதேசத் தலைவலி என அமெரிக்க முன்னாள் அயலுறவு அமைச்சர் மடேலின் அல்பிரைட் சாடியுள்ளார்.

அயல்நாட்டவர் உட்பட 200க்கும் அதிகமானோரை பலி கொண்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் மடேலின் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது கருத்துப்படி சர்வதேச நாடுகளுக்கு தலைவலி கொடுக்கும் பயங்கரவாதம், அணு ஆயுதம், தீவிரவாதம், ஊழல், ஏழ்மை ஆகிய அனைத்து பிரச்சனைகளும் பாகிஸ்தானிடம் உள்ளது.

எனவே, தற்போதைய அதிபருக்கும் (புஷ்), இந்தியா செல்ல உள்ள அயலுறவு அமைச்சருக்கும் (காண்டலீசா ரைஸ்) இப்பிரச்சனையில் கூடுதல் பொறுப்பு உள்ளதாகவே கருதுகிறேன்.

இதேபோல் அடுத்த அதிபர் (ஒபாமா), அயலுறவு அமைச்சர் (ஹிலாரி) ஆகியோரும் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஏற்படும் பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்