அமெரிக்காவின் புதிய அயலுறவு அமைச்சர் ஹிலாரி: ஒபாமா அறிவிப்பு
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:06 IST)
அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமா தலைமையில் அமையும் அரசின் அயலுறவு அமைச்சர் பதவி ஹிலாரி கிளிண்டனுக்கு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் பராக் ஒபாமா இதனைத் தெரிவித்தார். இதேபோல் தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அப்பதவியில் தொடருவார் என்றும் ஒபாமா கூறினார்.
அமெரிக்க உள்துறை அமைச்சராக ஜெனட் நபோலிடனோவும், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக சூசன் ரைஸும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜிம் ஜோன்ஸும், அட்டர்னி ஜெனரலாக எரிக் ஹோல்டரும் ஒபாமாவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் வேட்பாளர் தேர்வில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றாலும், ஹிலாரியை அயலுறவு அமைச்சராக ஒபாமா நியமித்துள்ளதை, ஹிலாரி ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.