நாயாறு கட‌ற்பர‌ப்‌பி‌ல் சிறிலங்க கடற்படை - கடற்புலிகள் கடும் மோதல்!

புதன், 19 நவம்பர் 2008 (01:33 IST)
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படை கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலு‌க்கு கடு‌ம் எ‌தி‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாகவு‌ம், இ‌தி‌ல் கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன எ‌ன்று‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கமாண்டோக்கள் 12 ஆரோ படகுகளிலும், இர‌ண்டு நீருந்து விசைப்படகுகளிலும் வந்து செவ்வாய்க்கிழமை காலை 6.15 ம‌ணியள‌வி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.

இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா தரைப்படையினர் எறிகணைத் தாக்குதலை செறிவாக நடத்த, வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகியன இணைந்து தாக்குதலை நடத்தின.

இதற்‌கிடையே, கடற்புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் கமாண்டோக்கள் இழப்புக்களை சந்தித்துள்ளனர்.

சுமார் 45 நிமிடம் வரை நடைபெற்ற மோதலையடுத்து மூன்று சிறப்பு படகுகள் சேதமாகிய நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

கடற்புலிகள் எதுவித இழப்புக்களும் இன்றி தளம் திரும்பியுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளதாக பு‌தின‌ம் இணையதள‌ம் செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

மு‌‌ன்னதாக, நாயாறு கட‌ற்பர‌ப்‌பி‌ல் பு‌லிக‌ளி‌ன் படகுக‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌திய‌தி‌ல் அவ‌ர்க‌‌ளி‌ன் இர‌ண்டு படகுக‌ள் ‌மூ‌ழ்க‌டி‌‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், 6 கட‌ற்பு‌லிக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம் ‌சி‌‌றில‌ங்க கட‌ற்படை தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்