ஐக்கிய அரபு குடியரசு தனது முதலாவது செயற்கைக்கோளை அடுத்த 6 மாதத்தில் ஏவ திட்டமிட்டுள்ளது.
மாறிவரும் பூகோள மாற்றத்திற்கு ஏற்ப தங்களது அடிப்படை புவி ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக சுமார் மில்லியன் டாலர் மதிப்பில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரசு குடியரசின் விண்வெளி தொழில்நுட்ப அமைப்பின் திட்ட மேலாளர்கள் அபுதாபியில் நேற்று தெரிவித்தனர்.
கஜகஸ்தானில் உள்ள பைகோனூரில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
கடந்த ஜூலை மாதமே இந்த செயற்கைக்கொள் தயாராகி இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களினால் அது தள்ளிப் போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.