யு.எஸ். ஏவுகணைத் தாக்குதல்: பாக்.கில் 9 பேர் பலி?

வெள்ளி, 14 நவம்பர் 2008 (17:09 IST)
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள வசிரிஸ்தான் மலைப்பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, தெற்கு வசிரிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குக்கிராமத்தைக் குறிவைத்து இன்று அதிகாலை அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் சந்தேகம் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், மற்றொரு முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அல்-கய்டா, தலிபான் பயங்கரவாதிகளின் புகழிடமாகத் திகழும் அப்பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 அயல்நாட்டவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்