இலங்கையில் கடும் மோதல் : 77 படையினர் பலி!

வியாழன், 13 நவம்பர் 2008 (18:27 IST)
இலங்கையில் அக்கராயன், கண்டி வீதி ஆகிய இருவேறு இட‌ங்க‌ளி‌ல் ‌சிறிலங்க படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் 77 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 145 படையினர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்கராயனில் உள்ள முட்கொம்பன் பகுதியில் நேற்று காலை முதல் மாலை நடைபெற்ற மோதலில் 20 படையினர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமுற்றனர் என்றும், இதே நேரத்தில் அக்கராயன் கோணாவில் பகுதியில் சிறிலங்க படையினரின் முன்நகர்விற்கு எதிராக நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டனர் என்றும், 25 பேர் காயமடைந்தனர் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, கடந்த வாரம் வியாழக்கிழமை கண்டி வீதியை வளைக்கும் நோக்கில் பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி வழியாக சிறிலங்க படையினர் முன்நகர்வுத் தாக்குதலில் மேற்கொண்டனர்.

இதற்கு பதிலடி கொடுத்து விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை மாலை வரை நடத்திய தாக்குதலில் 45 படையினர் கொல்லப்பட்டதாகவும், 100 படையினர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்