இங்கிலாந்து மீது தா‌க்குத‌ல் நட‌த்த அல்-கய்டா திட்டம்

பி‌ரி‌ட்ட‌ன் மீது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த அல்-கய்டா திட்டமிட்டுள்ளதாக ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.

பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு, தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இதுகுறித்த அறிக்கையை ‌பி‌ரி‌ட்ட‌ன் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது.

லண்டன், பிர்மிங்காம் மற்றும் லுடன் பகுதிகளில் இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்வதற்கு அல்-கய்டா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே ‌பி‌ரி‌ட்ட‌ன் நாடாளுமன்றம், வொய்ட்ஹால், பக்கிங்ஹாம் மற்றும் செயின்ட் ஜேம்ஸ் மாளிகைகள் தாக்குதலுக்கான இலக்காக இருக்கலாம் என்ற அடிப்படையில் அவற்றிற்கு அரசு உயர் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பி‌ரி‌ட்ட‌னு‌க்கு தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் உள்ளது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும். அல்-கய்டாவுடன் தொடர்பு கொண்டுள்ள சர்வதேச பயங்கரவாத இயக்கங்களிகளின் முக்கியக் குறியாக ‌பி‌ரி‌ட்ட‌ன் உள்ளது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டு பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் தற்போது‌ ப‌ி‌ரி‌ட்ட‌னில் புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

பி‌ரி‌ட்ட‌‌னில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்து குறிப்பாக பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டவர்களும், ஆப்ரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், ஈராக் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் சிலருக்கும் பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பிருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்