9 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா பேச்சு!

சனி, 8 நவம்பர் 2008 (10:03 IST)
உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு, புவியை அச்சுறுத்தி வரும் வெப்பமடைதல் ஆகிய பிரச்சனைகள் குறித்து இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் பராக் ஒபாமா தொலைபேசியில் பேசியுள்ளார்.

அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்நாட்டு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பாராட்டிய தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிதாக அவருடைய பேச்சாளர் கூறியதாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரெளனுடன் பேசிய ஒபாமா, உலக பொருளாதார பின்னடைவு, நிதி நெருக்கடி, ஈராக், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்காசிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தாக அச்செய்தி கூறுகிறது.

ஜப்பான் பிரதமர் டாரா ஆசோ, பிரான்ஸ் அதிபர் நிக்கலாஸ் சர்கோசி, ஜெர்மன் வேந்தர் ஆஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஓல்மார்ட், மெக்சிகோ அதிபர் ்பெலிப்பி கால்டெரான், தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக் ஆகியோருடன் ஒபாமா பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்