மெக்சிகோ பேருந்து விபத்தில் 17 பேர் பலி!

சனி, 8 நவம்பர் 2008 (04:02 IST)
மெக்சிகோவின் ஒசாகா மாகாணத்தில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

ஒரு திருப்பத்தில் பேருந்தை திருப்பிய ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து கவிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்