இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.8 ஆகப் பதிவாகியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி காலை 10.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மலுகு மாகாணத்தின் வடமேற்கில் உள்ள சௌம்லகி பகுதியில் மையம் கொண்டதாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சௌம்லகி பகுதியில் கூட இதன் தாக்கம் உணரப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானது முதல் இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.