மன்னர் ஞானேந்திராவின் திட்டத்தை பிரச்சன்டா ஏற்கவில்லை: கொய்ராலா!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (03:04 IST)
நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஞானேந்திரா, அந்நாட்டின் மன்னராக இருந்த போது ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளை சமாளிக்க, மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரச்சன்டாவுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கொய்ராலா, கடந்த 2005 நவம்பரில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தன்னை சந்தித்த பிரச்சன்டா, மன்னர் ஞானேந்திரா தன்னை சந்தித்துப் பேசியதாகவும், மன்னராட்சியைத் தொடர முன்வந்தால் ஆட்சியில் பங்கு தருவதாக தனக்கு வலைவீசியதாகவும் தெரிவித்தார் என்றார்.
எனினும், மன்னரின் திட்டத்தை பிரச்சன்டா ஏற்கவில்லை என்றும் கொய்ராலா தெளிபடுத்தியுள்ளார்.