மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (11:39 IST)
தெற்கு மெக்சிகோ மாகாணமான சியாபாஸில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரம் இது வரை வெளியாகவில்லை.

ரிக்டர் அளவுகோலில் 6.6 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி கவுத்தமாலா எல்லைப்பகுதியில் உள்ள சுசியாதே என்ற நகருக்கு 13 மைல்கள் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது கவுத்தாமாலாவில் உணரப்பட்டது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கச் செய்தியை கேள்விப்பட்டவுடன் மக்கள் தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதால் தொலைபேசி தொடர்புகள் சேதமடையவில்லை என்று உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்