இலங்கையில் அரசு நிலத்தை தனியாருக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 1994 முதல் 2005ஆம் ஆண்டு வரை அதிபராக பதவியில் இருந்தவர் சந்திரிகா. கொழும்புவில் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள நிலத்தை கோல்ஃப் தொடர்பான படிப்பிற்காக ஒதுக்கியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 27 ஆயிரம் அமெரிக்க டாலர் (30 லட்சம் ரூபாய்) சந்திரிகாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பது இதுவே முதல்முறை.
மேலும் கோலஃப் திட்டத்தையும் நீதிபதி சரத் என். டிசில்வா ரத்து செய்ததுடன் அந்த நிலத்தை மீண்டும் அரசிடமே திருப்பி வழங்கவும் உத்தரவிட்டார்.