நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அந்த விவாகரத்து மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.. கடந்த 5 வருடங்களாகவே அவர்களின் உறவு நீடித்து வருகிறது.. நான் இதைக் கேட்ட போது அந்த உறவை தொடர மாட்டேன் என்று சொன்னவர் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.. ஒரு கட்டத்தில் அந்த நடிகையை வீட்டுக்குள்ளே அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்..
என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வெளியே சொல்லாமல் இருந்தேன்.. இனிமேல் முடியாது என்கிற நிலை வந்ததால் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறேன்.. தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை சொல்லுவேன்.. அவர் மீது வழக்கும் தொடர்வேன் என சொல்லியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர விஜய் ரசிகர்கள்சங்கீதாவைத் திட்டத் தொடங்கினார்கள். சிலர் மோசமாக விமர்சித்தனர். இதுக்கு பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது என்றெல்லாம் முட்டுக் கொடுத்தார்கள்..
ஆனால் திரிஷாவை அழைத்துக் கொண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார் விஜய்.. இதை பார்த்து பலரும் அதிருப்தி அடைந்தனர்.. இதுவரை விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட கோபம் அடைந்தனர். விஜயின் செயல் அவரின் அரசியல் வாழ்வை பாதிக்கும் என பலரும் சொல்லி வருகிறார்கள்..
இந்நிலையில், சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் சக இயக்குனர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி இதெல்லாம் எதுக்கு எதுக்கு?. இந்த போஸ் எதுக்கு?.. யாரை பழிவாங்குவதற்கு?.. நல்லா போயிட்டுருந்தது.. இப்ப எல்லாம் போச்சு.. நாலு செவுத்துக்குள்ள இதெல்லாம் வச்சுக்கோ!.. இனிமே முட்டுக் கொடுக்க முடியாதுன்னு அந்த கட்சிக்காரனே சொல்றான் என்றெல்லாம் பொங்கியிருந்தார்..
அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இதையடுத்து விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் சமுத்திரகனியை திட்ட துவங்கி விட்டார்கள்..
சினிமா துறையினரே வெளிப்படையா துப்ப ஆரம்பிச்சுட்டாங்க ❤️