அமெரிக்க அதிபராக ஒபாமாவுக்கு அதிக ஆதரவு!
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (13:17 IST)
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளர் பாராக் ஒபாமாவே வரவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர ். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளத ு. இது பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பராக் ஒபாமாவுக்கு 76 விழுக்காடு ஆஸ்ட்ரேலியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர ். ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மற்றொரு அதிபர் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு 10 விழுக்காட்டினரே ஆதரவு தெரிவித்துள்ளனர ். ஆஸ்ட்ரேலியாவில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 1,000 பேரில் 85 விழுக்காட்டினர் தேர்தல் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருவதாக கூறினர ். இதில் பங்கேற்ற மக்களில் 24 விழுக்காட்டினர் அமெரிக்க தேர்தலில் மிக ஆர்வமாக இருக்கின்றனர் என்று இந்த கருத்துக் கணிப்பை நடத்திய ஏ.ஏ.ப ி. நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளத ு. உலகம் முழுவதும் 17 நாடுகளில் 17,000 மக்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில ், ஒபாமாவே அமெரிக்காவின் 44-வது அதிபராக வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர ். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 15 விழுக்காட்டினர் தங்களை அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்றும் 67 விழுக்காட்டினர் நடுநிலைமை வகிப்பதாகவும ், 17 விழுக்காட்டினர் தாங்கள் அமெரிக்க ஆதரவாளர்கள் என்றும் கூறியுள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பில் தீவிரவாதம ், ஈராக் போர ், உலக பொருளாதாரம ், ஏழ்ம ை, மனித உரிம ை, சுற்றுச்சூழல ், சர்வதேச வர்த்தகம் மற்றும் அணு ஆயுத பரவல் உள்ளிட்ட பன்னாட்டு பிரச்சினைகள் பற்றி கேட்கப்பட்டத ு.
செயலியில் பார்க்க x