ரஷ்யா முழுவதும் உள்ள ஆயுத சாலைகளில் இருந்து மாயமான சுமார் 2.15 லட்சம் துப்பாக்கிகளை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக ரஷ்ய உள்துறை அமைச்சர் செர்ஜி பெட்கின் அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த 1991இல் ஆயிரமாக இருந்த காணாமல் போன துப்பாக்கிகளின் எண்ணிக்கை, தற்போது 2 லட்சத்து 15 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும், இதற்கு தனது உள்துறை அமைச்சகம் எந்த விதத்திலும் காரணமில்லை எனத் தெரிவித்த அவர், ரஷ்ய ராணுவத்துறையின் மெத்தனமே இதற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் அர்மீனியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், நேட்டோ படைகளுக்கு அர்மீனியா ஆதரவு அளிப்பது குறித்து ரஷ்யா கவலை கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.