டெல்லியில் குண்டுவெடிப்பு: பாக். பிரதமர் கண்டனம்!

சனி, 27 செப்டம்பர் 2008 (18:40 IST)
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாத, தீவிரவாத செயல்களின் அட்டூழியங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதனால் உலகின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சிக்கி உயிரிழந்த அப்பாவிகளால் சோகம் சூழ்ந்துள்ளதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள கிலானி, பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், இவற்றை ஒழித்து உலகம் முழுவதும் நிலையான அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

புதுடெல்லியில் மெஹ்ரவ்லி பூ சந்தை அருகேயுள்ள கடையில் இன்று மதியம் குண்டு வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான். இதில் காயமடைந்த 17க்கும் அதிகமானவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்