ஏமன்: அமெரிக்க தூதரகத்தில் தாக்குதல்- வயலார் ரவி கண்டனம்!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:46 IST)
ஏமன் நாட்டில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இந்தியப் பெண் உட்பட 16 பேர் உயிரிழந்ததற்கு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் சென்றுள்ள அவரை சந்தித்த அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி பெற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

அப்போது அவரிடம், ஏமன் நாட்டில் அமெரிக்க தூதரகத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமைச்சர் வயலார் ரவி கடும் கண்டனம் தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது நேற்று நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல் அந்நாட்டு பாதுகாப்புப் படையை சேர்ந்த ஆறு வீரர்கள், கேரளாவைச் சேர்ந்த ராணி கிருஷ்ணன் நாயர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்