அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தவறு: ரஷ்யா!

புதன், 10 செப்டம்பர் 2008 (17:45 IST)
ரஷ்யாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது அரசியல் ரீதியான தவறு என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்து அமெரிக்க-ரஷ்ய அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அதிபர் புஷ் திரும்பப் பெற்றதஅரசியல் ரீதியாக தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா எதிர்காலத்தில் வருந்த வேண்டியிருக்கும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

தெற்கு ஒசீடியா, அப்காஷியா பகுதிகளில் நுழைந்த ஜார்ஜிய படைகளை, ரஷ்ய ராணுவ விரட்டியடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தெற்கு ஒசீடியா, அப்காஷியாவை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அறிவித்ததை கண்டித்தும், அந்நாட்டுடன் மேற்கொண்டிருந்த அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி அமெரிக்கா விலகியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்