பாக். அதிபராக பதவியேற்றார் ஜர்தாரி!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:06 IST)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரான ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டின் புதிய அதிபராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் இன்று மதியம் 2 மணியளவில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்‌சியில், தலைமை நீதிபதி அப்துல் ஹமீத் டோகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

எனினும், பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்