இந்தியாவிற்கு விலக்கு: 6 நாடுகள் எதிர்ப்பு! என்.எஸ்.ஜி. கூட்டம் இன்றும் தொடர்கிறது!
சனி, 6 செப்டம்பர் 2008 (12:50 IST)
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள முழு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பதற்கு 6 ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு காட்டி வருவதால், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு ((Nuclear Suppliers Group - NSG) கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதனால் இரண்டு நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுக் கூட்டப்பட்ட என்.எஸ்.ஜி. கூட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.