தாய்லாந்து அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் நிபந்தனைக்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என அந்நாட்டு பிரதமர் சாமக் சுந்தரவேஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேரடி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தாம் பதவி விலகுவேன் என நினைக்க வேண்டாம். தற்போதைய சூழலில் நாட்டிற்கு தலைமை தேவை என்பதால் ஜனநாயகத்தை காக்க பதவி விலகும் முடிவை எடுக்க மாட்டேன் என்றார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் தங்களுக்கு எதிராக ஜனநாயகத்திற்கான ஒருங்கிணைந்த மக்கள் அமைப்பின் (People’s Alliance for Democracy-PAD) போராட்டம் நடத்தி வருகிறதே என்ற கேள்விக்கு, ஜனநாயக முறைப்படி எந்த ஒரு அமைப்பின் நிபந்தனைக்கு அடிபணிந்து தாம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார்.