சீனாவில் அடுத்தடுத்து இரண்டு இரடங்களில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இது வரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் சிச்சுவான் மாகாணம், பன்ஜிகுவா என்ற இடத்தில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. நேற்று இந்திய நேரப்படி பகல் 2 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தால் 17 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.
இதேபோல் சிச்சுவான் மாகாணத்துக்கு அருகில் உள்ள யுன்னான் மாகாணத்தையும் இந்த நில நடுக்கம் தாக்கியது. இதில் 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்திய நேரப்படி மாலை 6.16 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.