நேபா‌ள‌த்‌தி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:18 IST)
நேபாள‌த்‌தி‌ல் நே‌ற்று கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அள‌வு கோ‌லி‌ல் இது 6.5 ஆக ப‌திவா‌கி உ‌ள்ளது. இ‌த்தகவலை அ‌ந்நா‌ட்டு வா‌னிலை ஆரா‌ய்‌ச்‌‌சி மைய‌ம் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌வடமே‌ற்கு நேபா‌ளி‌‌ல் உ‌ள்ள ஜு‌ம்லா மாவ‌ட்ட‌த்‌தி‌ன் மே‌ற்கே ‌ஜிஜா‌ங் பகு‌தியை சு‌ற்‌றிலு‌ம் மைய‌ம் கொ‌ண்டு ஏ‌ற்ப‌ட்டதாக அ‌ந்நா‌ட்டு தே‌சிய ‌நிலநடு‌க்க ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌ம் ப‌ற்‌றி தக‌வ‌ல் ஏது‌ம் இ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்