ரஷ்யாவுடனான கருத்து வேறுபாடுகள் தொடரும் நிலையில், ஜார்ஜியாவுக்கு உதவும் நோக்கத்துடன் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று அங்கு விரைந்துள்ளது.
கருங்கடலில் அமைந்துள்ள ஜார்ஜியாவின் பதுமி துறைமுகத்திற்கு, ஞாயிற்றுக் கிழமை அன்று அமெரிக்காவின் மெக்பால் போர்க்கப்பல் வந்து சேர்ந்திருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கப்பலில் உணவுப் பொருட்கள், மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரஷ்யத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜார்ஜிய மக்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன.
இதேபோல், உதவி- நிவாரணப் பொருட்களுடன் மேலும் இரண்டு அமெரிக்க கப்பல்கள் ஜார்ஜியாவுக்கு வரவிருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.