இந்தியாவின் 62வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் புஷ், இத்தருணம் இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள நெருங்கிய நட்புறவை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார்.
இந்திய-அமெரிக்க சமுதாயத்தினருக்காக அமெரிக்க மக்கள் தொடர்பு அலுவலவத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், இந்தியா சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகள் பூர்த்தி செய்ததைக் கொண்டாடும் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புஷ் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியால் துவக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டத்தின் வாயிலாக கடந்த 1947ஆம் ஆண்டு இதே தினத்தில் இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவு கூர்ந்துள்ள புஷ், இதன் மூலம் சுதந்திரம் கிடைப்பது சற்று தாமதமாகலாம்; ஆனால் மறுக்கப்பட்டு விடாது என்பதை உலகிற்கு இந்தியா உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.