அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இந்தாண்டுக்குள் ஒப்புதல்: அமெ‌‌ரி‌க்கா!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (16:44 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்‌தி‌ற்கு இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படும் என அ‌ந்நா‌ட்டு அரசு ந‌‌ம்‌பி‌க்கை தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் இன்று இதனைத் தெரிவித்த அமெரிக்க அரசின் பே‌‌ச்சாள‌ர் கன்சாலோ கலிகோஸ், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்ற உறு‌ப்‌பின‌ர்களுட‌ன் விவாதித்து வருவதாகவும், இந்த ஒப்பந்தத்திற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் (என்.எஸ்.ஜி) செப்டம்பர் துவக்கத்தில் அனுமதி பெறப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக புஷ் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் அமெரிக்க நாடாளுமன்ற நடைமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று தெளிவுபடுத்திய அவர், இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒப்புதலைப் பெறுவோம் என்றார்.

முன்னதாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெ‌ரி‌க்க அயலுறவு விவகாரக் குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மன், எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.‌யிட‌ம் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நிபந்தனையற்ற அனுமதி பெற்றுத் தருவது அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தின் போது சிக்கலை ஏற்படுத்தும் என்று‌ம், இதனை புஷ் பதவிக்காலம் முடிவதற்குள் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்